Thursday, November 12, 2009

முற்றுப் புள்ளி - ஒரு துவக்கம்

முற்றுப் புள்ளியே அழகிய துவக்கம் -
புள்ளி வைத்து கோலம் இடுகையில்!

சிறு புள்ளியாய் ஆதவன் சுருங்கும் நேரம்
வெயிலின் முடிவு அல்ல - குளிர் நிலவின் துவக்கம்!

துளையில் புள்ளியாய் சுருங்கும் காற்றின் சத்தம்
ஒரு ஓசையின் முடிவு அல்ல - குழலோசையின் துவக்கம்!

புள்ளியாய் பாறையை அறையும் உளியின் அடி
அந்த கல்லின் முடிவு அல்ல - ஒரு சிலையின் துவக்கம்!

கடற்கரையில் காலடி நனைக்கும் பெண்ணே!
ஆழ்கடலாம் என் மனதில் கடல் அலையாம் உன் எண்ணம்
உன் காலடி தொட்டது அந்த அலையின் முற்று புள்ளி அல்ல - அது
உன் நினைவை சுமந்து ஓடி வரும் மற்றொரு அலையின் துவக்கம்!!

No comments: